வாசகர்கள் கருத்துகள் (2)
enough stop
Please don't stop thalava, continue with more and more films. We are waiting
ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படம் பத்து நாட்களுக்கு முன்பு வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து அவர் நடித்து வரும் 'ஜெயிலர் 2' படம் அடுத்த ஆண்டில் வெளியாக உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும்.
இதற்கடுத்து ரஜினி யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 'கூலி' வெளியீட்டிற்குப் பின்பு, லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படத்தில் ரஜினி, கமல் இணைந்து நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய அறிவிப்பு வரும் வரை அது உறுதி இல்லை.
இதனிடையே, தெலுங்கு இயக்குனரான நாக் அஷ்வின் சமீபத்தில் ரஜினிகாந்த்தை சந்தித்து ஒரு கதையைக் கூறியுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. முழு திரைக்கதையையும் ரஜினி கேட்டுள்ளாராம். அது அவருக்குப் பிடித்திருந்தால் படம் ஆரம்பமாகலாம். நாக் அஷ்வின் அடுத்து 'கல்கி 2989 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும். ஆனால், அப்படம் தாமதமாகி வருகிறது. வேறு சில தெலுங்கு இயக்குனர்களும், தமிழ் இயக்குனர்களும் ரஜினியை சந்தித்து கதை சொல்லி உள்ளார்கள். ஆனால், ரஜினி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்கிறார்கள்.
enough stop
Please don't stop thalava, continue with more and more films. We are waiting