‛ஆட்டி' பெயர் சொல்லும் படமாக இருக்கும் : அபி
மேதகு படத்தை இயக்கிய கிட்டுவின் அடுத்த படம் ஆட்டி. இதில் இசக்கி கார்வண்ணன், அயலி அபிநட்சத்திரா நடித்துள்ளனர். ஆட்டி என்றால் பெண் தலைமையை குறிக்கும், பெண்டாட்டி என்ற சொல் கூட அப்படிதான் வந்துள்ளது. எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள்' என்ற கருத்தை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் பலரின் குல தெய்வங்கள் பெண் தெய்வங்களாகவே இருக்கிறது. நாம் பெண்மையை போற்றிய இனம். அந்த காலத்திலேயே பெண்களை கொண்ட படை வைத்திருந்தோம். இந்த படத்தில் ஜாக்கெட் அணியாமல் சங்ககால பெண்ணாக அபி நட்சத்திரா நடித்துள்ளார் என்கிறார்கள் படக்குழுவினர்.
படம் குறித்து பேசிய அபிநட்சத்திரா, ‛‛இந்த படத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். என் கேரக்டர், கெட்அப் வித்தியாசமாக இருக்கும். இயக்குனர் மனைவியே காஸ்ட்யூமர் ஆக இருந்தார். அவர் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆட்டி பெயர் சொல்லும் படமாக இருக்கும்'' என்றார்.