பிளாஷ்பேக்: பாலிவுட் படத்தில் நடித்த பத்மினி, ராகினி
ADDED : 38 minutes ago
தமிழ் சினிமாவில் நாட்டியத்திலும் நடிப்பிலும் முன்னணியில் இருந்த பத்மினி, ராகினி சகோதரிகள் சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளனர். அவற்றில் முக்கியமான படம் 'கொய்தி'. இந்தப் படத்தை முகமத் முகைதீன் இயக்கி இருந்தார். சுரேஷ் என்ற ஹிந்தி நடிகருடன் பத்மினி, ராகினி நடித்திருந்தனர்.
ஹிந்தியில் பெரிய அளவில் வெற்றி பெறாத இந்த படத்தை பத்மினி, ராகினி நடித்திருந்ததால் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டனர். படத்திற்கு 'மகுடம் காத்த மங்கை' என்று தலைப்பு வைத்தனர். கே.வி மகாதேவன் இசையமைத்தார், மருதகாசி தமிழ் பாடல்கள் மற்றும் வசனங்கள் எழுதினார். இங்கும் படம் வெற்றி பெறவில்லை. ஆனால் பாடல்கள் ஹிட்டானது.