பிளாஷ்பேக்: நயன்தாராவை தவறவிட்ட பார்த்திபன்
பார்த்திபன் 'குடைக்குள் மழை' என்ற ஒரு படத்தை ஆரம்பித்தார். அந்தப் படத்திற்கு அழகான ஹீரோயின் ஒருவர் வேண்டும் என்று கேரளா சென்று ஆடிசன் நடத்தி தேர்வு செய்த நடிகை டயானா மரியம் குரியன்.
ஆனால் பார்த்திபன் படத்தை தொடங்க தாமதமாக, மரியாவும் வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். மரியமை சந்திக்க பார்த்திபன் நேரில் வரச் சொன்னார். ஆனால் அவர் மறுத்து, நான் வேறொரு படத்தில் நடித்து வருகிறேன். அதை முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதனால் கோபம் அடைந்த பார்த்திபன் உடனடியாக மதுமிதா என்ற தெலுங்கு நடிகையை வைத்து படத்தை ஆரம்பித்து விட்டார். அந்த மரியாதான் நயன்தாரா. பின்நாளில் நயன்தாராவை சந்தித்த பார்த்திபன் : அன்று நீங்கள் என் படத்தில் நடித்திருந்தால் நானும் உங்களை வைத்து வேறு சில படங்களை இயக்கியிருப்பேன். ஆனால் நீங்கள் இந்த உயரத்தை தொட்டிருக்க முடியாது என்றார்.