தயாரிப்பு நிறுவனம் துவக்கம்: திருப்பதியில் கெனிஷாவுடன் ரவிமோகன் சாமி தரிசனம்
ADDED : 46 days ago
சமீபகாலமாக ரவிமோகனின் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சொந்த வாழ்க்கையில் மனைவியை பிரிந்துள்ள ரவிமோகன் தற்போது கெனிஷா என்ற பாடகியுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் ரவிமோகன் ஸ்டூடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார்.
இதற்காக அவர் தனது தோழி கெனிஷாவுடன் நேற்று திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு இருவருக்கும் ரங்கநாயக்கர் மண்டபத்தில் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக நடந்த சுப்ரபாத சேவையிலும் இருவரும் கலந்து கொண்டனர்.