உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு

கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு


சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்தவர் மறைந்த பிரபல நடிகர் ஜெய்சங்கர். தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்டவர் 2000ம் ஆண்டு மறைந்தார். இந்நிலையில் ஜெய்சங்கர் வீடு இருந்த கல்லூரி சாலைக்கு அவர் பெயர் சூட்ட வேண்டும் என ஜெய்சங்கர் மகனான டாக்டர் விஜயசங்கர், முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையை ‛ஜெய்சங்கர் சாலை' என பெயர் மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இனி, அந்த பகுதி ஜெய்சங்கர் சாலை என்றே அழைக்கப்படும்.

ஏற்கனவே, விவேக் வீடு இருந்த விருகம்பாக்கம் சாலைக்கு அவர் பெயரும், சென்னை காம்தார் நகரில் பாடகர் எஸ்.பி.பி வீடு இருந்த சாலைக்கு அவர் பெயரும் வைக்கப்பட்டது. விரைவில் சென்னை பட்டினபாக்கத்தில் ஒரு சாலைக்கு இசையமைப்பாளர் ஏம்.எஸ்.வி பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த வரிசையில் ஜெய்சங்கர் பெயரும் இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (4)

sankar, Nellai
2025-08-28 13:27:10

ரொம்ப முக்கியம்


aaruthirumalai
2025-08-27 10:17:25

தவறான நடைமுறை.


hari
2025-08-27 06:06:00

which govt will spend time and money to change the ud proof of people living there. they have to run behind government machinery waste of time


ரிஷி கௌதம்
2025-08-26 17:37:07

இனி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்கள் மற்றும் தெருக்களுக்கு அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளின் பெயர்களை வைத்து விட்டால் தமிழகம் இனி சுபிட்சமாக இருக்கும். தமிழர்களுக்கு அனைத்தும் கிடைத்து விடும்...