கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்!
ADDED : 411 days ago
தமிழ் சினிமாவில் ‛குட்டிப்புலி, லப்பர் பந்து, மாமன், டான்' போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர் பால சரவணன். இவர் நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டி சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கியுள்ளார்.
தற்போது பால சரவணனை தேடி கதாநாயகன் வாய்ப்பு வந்துள்ளது. அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் பால சரவணன் கதையின் நாயகனாக நடிக்கவுள்ளார். இதில் அவர் போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இதற்காக அவர் சுமார் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்கிறார்கள்.