உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்!

‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்!


பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் இணைந்து நடித்த படம் ‛வார்-2'. ஆக்சன் கதையில் உருவான இந்த படம் கடந்த 14ம் தேதி திரைக்கு வந்தது. இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படம் திரைக்கு வந்த முதல் நாளில் இருந்தே நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது.

அதனால் 400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம், இந்தியாவில் 265 கோடியும், வெளிநாடுகளில் 75 கோடியும் சேர்த்து 340 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதனால் வார் - 2 படத்தை தயாரித்த யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்தபடியாக ஜூனியர் என்டிஆரை வைத்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டிருந்த இந்நிறுவனம் தற்போது அந்த படத்தை கைவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

angbu ganesh, chennai
2025-08-28 09:45:13

அய்யா தினமலர் அவர்களே ஓடாத இந்த படத்துக்கு 3/5 கொடுத்தியே நல்ல collection ஆகின கூலி படத்துக்கு 2.5/5 ஆகா உன் விமர்சனம் வேஸ்ட்