உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில்

அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில்

கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு மற்றும் பலர் நடித்துள்ள 'காட்டி' படம் இந்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கில் தயாராகியுள்ள இப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். இப்படத்தின் புரமோஷனுக்காக படத்தின் நாயகியாக அனுஷ்கா வருவதில்லை. இத்தனைக்கும் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அவர்தான். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள ஒரு படத்திற்கும் அவர் வெளியில் வராதது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது பற்றி படத்தின் இயக்குனர் கிரிஷ் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில், “புரமோஷன்களில் கலந்து கொள்வது அல்லது கலந்து கொள்ளாமல் இருப்பது முற்றிலும் அவரது தனிப்பட்ட விருப்பம். அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவரது அற்புதமான நடிப்பே படத்தை வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும். ஷீலாவதியாக, அனுஷ்கா தனது மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் தமிழ் நடிகரான விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரும், இயக்குனர் கிரிஷும் தான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்கின்றனர்.

இந்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி தமிழில் 'மதராஸி, பேட் கேர்ள்' ஆகிய படங்களும் தெலுங்கிலிருந்து டப்பிங் ஆகி வரும் 'காட்டி' படமும் வெளிவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !