உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி

தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி

தெரு நாய் தொடர்பான பிரச்னை இந்திய அளவில் எதிரொலிக்கிறது. இதை வைத்து தமிழில் தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் ‛நீயா நானா' நிகழ்ச்சியில் சிறப்பு விவாதம் நடந்தது. நாயை ஆதரித்து பேசுபவர்கள், அதற்கு எதிரானவர்கள் என களமிறங்கி பேசினார். இந்த நிகழ்ச்சி நேற்று ஞாயிறு அன்று ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சி டிரெண்ட் ஆகி உள்ளது. வலைதளங்களில் இதைப்பற்றி நிறைய பேர் தங்களது ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாய்களுக்கு ஆதரவாக பேசிய நடிகர் படவா கோபி மற்றும் நடிகை அம்மு ஆகியோரின் பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பலரும் அவர்களை டிரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் படவா கோபி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‛‛மனிதர்கள் மீதான அன்பிலும், நாய்கள் மீதான அன்பிலும் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நோக்கத்தில் தான் என் வீட்டு கல்யாண வேலைக்கு மத்தியிலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆனால், நான் நினைத்தது வேறு, அங்கு நடந்தது வேறு. நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து எனக்கு தெரியாது. என் கருத்தை முழுமையாக நிகழ்ச்சியில் தெரிவிக்கவே விடவில்லை. நீங்கள் எல்லோரும் பார்த்தது எடிட் செய்யப்பட்ட எபிசோடு. அப்படி போடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. முடிந்தால் அந்த நிகழ்ச்சியின் எடிட் செய்யப்படாத வீடியோவை போடச் சொல்லுங்கள் அப்போது நான் பேசியது புரியும். பொது மக்கள் யாரும் என்னை தவறாக நினைத்துவிடாதீர்கள். நான் பேசியது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல. என்னுடைய கருத்துகள் அப்படி புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய படவா கோபி, ‛‛இரவு 9 மணிக்கு மேல் வெளியே செல்லாதீர்கள், நாய் குறைக்கும்'' என கூறியிருந்தார். இதை வைத்து அவரை நிறைய பேர் டிரோல் செய்தனர். இந்தச்சூழலில் தான் அவர் வீடியோ வெளியிட்டு விளக்கத்துடன் மன்னிப்பும் கேட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (6)

Ram, ottawa
2025-09-06 07:59:04

மன்னிப்பு எங்க


angbu ganesh, chennai
2025-09-02 09:48:21

இந்த தெரு நாய்கள் குறிப்பாக சிறுவர்களைத்தான் குறி வைக்கிறது சிறார்கள் இதனை பார்த்து பயந்து ஓட அதுங்க தொரத்துதுங்க இதனை நான் அடிக்கடி சென்னை சைதாபேட்டைலி பார்க்கிறேன் நானே சில சிறுவர்களை துரத்தும் நாய்களை விரட்டி உள்ளேன் கண்டிப்பா இந்த தெரு நாய்களை பிடித்து அதற்கான காப்பகங்களில் அடைக்க வேண்டும்


Karthik, Chennai
2025-09-02 08:39:04

நாய் பிரியர்களை நல்ல மனநல மருத்துவர்களிடம் கூட்டிச்செல்ல வேண்டும் பித்து பிடித்தவர் போல் பேசுகிறார்கள் - சிறு குழந்தைகள், முதியவர்கள், ஊனமுற்றவர்கள் என்று எவ்வளவோ பேர் இறந்திருக்கிறார்கள் என சொன்னபிறகும் அது அவர்கள் தப்பு என்று வாதிடுகிறார்கள் இவர்களை என்ன செய்வது?


Senthoora, Sydney
2025-09-04 12:30:45

நாய்களைவிட கட்டுப்பாடு, விதி முறை பின்பற்றாமல் எட்படும் விபத்துகளும், மரணங்கழும் பல நூறு மடங்கு அதிகம்,


V RAMASWAMY, Bengaluru
2025-09-02 07:57:39

நீயா நானா நிகழ்ச்சியில் இந்த விஷயம் கார சாரமாக விவாதிக்கப்பட்டது. மிருக ஆர்வலர்கள் எவருக்கும் மனிதர்களின் உயிர்களைப்பற்றி எள்ளளவும் கவலை இல்லை. அவர்களுக்கு வேண்டியது அவர்களின் செல்லப் பிராணிகளுக்கு வித விதமாக அலங்காரம் செய்து அவர்களின் வாகனங்களின் அழைத்துச்சென்று டாம்பீகத்தை வெளிப்படுத்தி மக்களின் கவனைத்தை ஈர்க்க வேண்டியது. பெருகும் நாய்கள் தொந்திரவு தீவிரமடைந்து மக்களின் உயிருக்கே உலை வைக்கும் நிலையில் இதனை ஒரு அவசரகால விஷயமாக எடுத்து அனைத்து மாநில மத்திய அரசு துறைகளும் நடவடிக்கை உடனடியாக எடுக்கவேண்டும்.


I Sathik Ali
2025-09-01 20:11:10

மனிதன் பூமி எல்லாம் விசம் பரப்பி விட்டுட்டன் அத நாள் மனிதன் எல்லாம் கொலை பன்னி விடாலமா