பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம்
ADDED : 45 days ago
புஷ்பா 2 படத்தை அடுத்து அட்லி இயக்கும் தனது 22வது படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை அல்லு அர்ஜுனின் பாட்டி அல்லு கனகரத்தினம் காலமானார். இதனால் மும்பையில் படப்பிடிப்பில் இருந்த அல்லு அர்ஜுன் உடனடியாக ஐதராபாத் விரைந்தார். நேற்றே இறுதிச்சடங்கு நடந்து முடிந்தன. பாட்டி மறைவு குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், எங்கள் அன்பான பாட்டி அல்லு கனகரத்தினம் இப்போது தனது சொர்க்க வாசல் ஸ்தலத்தில் ஓய்வு எடுக்கிறார். அவரது அன்பு ஞானம் மற்றும் இருப்பு ஒவ்வொரு நாளும் எங்களை மிஸ் செய்யும். இந்த நேரத்தில் தங்கள் பாசத்தை பகிர்ந்து கொள்ள முன்வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி'' என்று பதிவிட்டுள்ளார் .