ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி
ADDED : 47 days ago
விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்த சூரி, அதையடுத்து கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2, மாமன் போன்ற படங்களில் நடித்தார். தற்போது மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். மதிமாறன் புகழேந்தி என்பவர் இயக்கும் இப்படத்தில் சூரியுடன் சுகாஷ், மகிமா நம்பியார் முக்கிய வேடங்களில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தை அடுத்து இன்று நேற்று நாளை, அயலான் போன்ற படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சூரி. டைம் டிராவல் மற்றும் சயின்ஸ் பிக்சன் கதைகளில் தனது முந்தைய படங்களை இயக்கிய ரவிக்குமார் சூரி நடிக்கும் இந்த படத்தையும் டெக்னாலஜி கலந்து ஒரு மாறுபட்ட கதையில் இயக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.