மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம்
ADDED : 46 days ago
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கடந்தவாரம் சித்தார்த் மல்கோத்ரா உடன் இவர் நடித்த ‛பரம் சுந்தரி' படம் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தொடர்பாக பல்வேறு புரொமோஷன்களை செய்தார் ஜான்வி. அப்படி அவர் அளித்த ஒரு பேட்டியில் தனக்கு 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசை இருப்பதாக கூறி அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ‛திருமணத்திற்கு பின் எனக்கு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஏனென்றால் 3 எனது அதிர்ஷ்ட எண். மேலும் மூன்று குழந்தைகளில் இருவர் சண்டை போட்டால் கூட மற்றொருவர் அவர்களை சமாதானப்படுத்துவார். ஒருவருக்கு மற்றொருவர் ஆதரவாகவும், துணையாகவும் இருப்பார்கள்'' என்றார்.