பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
ADDED : 1 minutes ago
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கின்றார். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக வட சென்னை,இலங்கை, பேங்காக் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. இன்னும் இந்த படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமுள்ளது. இந்த பாடலை இன்னும் தமன் இன்னும் இசையமைத்து தரவில்லை. இது அல்லாமல் தயாரிப்பு தரப்பில் இருந்து இந்த பாடலுக்கான பொருட்செலவு தருவதில் எதோ நெருக்கடி உள்ளதால் இன்னும் படப்பிடிப்பு நிலுவையில் உள்ளது என்கிறார்கள்.