பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு
ADDED : 46 days ago
சினிமாவில் காமெடியன், இசையமைப்பாளர், பாடகர் என வலம் வரும் நடிகர் பிரேம்ஜி, தனது 45 வயதில் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்து என்ற பெண்ணுக்கும் அவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு வீட்டில் மனைவிக்கு கிச்சனில் வேலை செய்து கொடுப்பது, அவர் துவைத்த துணியை வீட்டின் மொட்டை மாடியில் தான் காய போடுவது என்பது உள்ளிட்ட பல புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது பிரேம்ஜியின் மனைவி இந்து கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது உறவினர்களும், சினிமா நண்பர்களும் அவர்களை நேரில் சென்று வாழ்த்தி உள்ளார்கள். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.