மேலும் செய்திகள்
பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு
6 minutes ago
அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா
6 minutes ago
மும்பை : மஹாராஷ்டிரா தொழிலதிபரிடம், 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி, தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும், தன்னிடம் பெற்ற 60 கோடி ரூபாயை தராமல் மோசடி செய்ததாக மும்பை போலீசில் தொழிலதிபர் தீபக் கோத்தாரி, 60, என்பவர் புகாரளித்தார்.
டீல் 'டிவி' பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்துக்கு 60 கோடி ரூபாய் கடனாக வாங்கி விட்டு, பின்னர் அந்த நிறுவனம் மீது திவால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் புகார் அளித்தார். மேலும், தன்னிடம் வாங்கிய 60 கோடி ரூபாயை, வேறு நிறுவனங்களில் ஷில்பா - ராஜ் தம்பதி முதலீடு செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து, ஷில்பா ஷெட்டி, அவர் கணவர் ராஜ் குந்த்ரா மீது, மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஷில்பா ஷெட்டி, அவர் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை போலீசார் பிறப்பித்துள்ளனர். இருவரும் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதால், வழக்கின் விசாரணையை சுமூகமாக நடத்துவதற்கு உதவியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
6 minutes ago
6 minutes ago