மேலும் செய்திகள்
அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு
3 minutes ago
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
3 minutes ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
3 minutes ago
வெளிநாட்டு கான்செப்ட்டான பிக்பாஸ் நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழுக்கு வந்தது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் காரணமாக 7-வது சீசன் உடன் கமல்ஹாசன் நிறுத்திக்கொண்டார். 8வது சீசன் முதல் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதற்காக அவர் 60 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய்சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னர் தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசனுக்கு ஒவ்வொரு சீசனுக்கும் 100 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறுவார்கள்.
இதே நிகழ்ச்சியை மலையாளத்தில் தொகுத்து வழங்கும் மோகன்லால் 50 கோடியும், தெலுங்கில் தொகுத்து வழங்கும் நாகார்ஜுனா 75 கோடியும், ஹிந்தியில் தொகுத்து வழங்கும் சல்மான்கான் 200 கோடியும் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
3 minutes ago
3 minutes ago
3 minutes ago