மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
6 minutes ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
6 minutes ago
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் 'குட் பேட் அக்லி'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். படத்தில் இளையராஜா இசை அமைத்த புகழ்பெற்ற பாடல்களான 'இளமை இதோ இதோ', 'ஒத்த ரூபாயும் தாரேன்...', 'என் ஜோடி மஞ்சக் குருவி...' ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.
படம் ஓடி முடிந்த நிலையில் தற்போது இளையராஜா தனது பாடல்களை எனது அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், என் அனுமதியில்லாமல் இந்த பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்துக்கு விரோதமானது. அதனால், இந்த படத்தில் நான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்' என்று இளையராஜா கூறி உள்ளார். இந்த வழக்கு வருகிற 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
'படத்தில் பயன்படுத்திய இளையராஜாவின் இந்த பாடல்களின் உரிமம் யாரிடம் உள்ளதோ அவர்களிடம் அனுமதி பெற்றே பயன்படுத்தப்பட்டுள்ளது' என்று தயாரிப்பு தரப்பு ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்தது.
6 minutes ago
6 minutes ago