உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்த நதியா, பாசில்

பிளாஷ்பேக் : இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்த நதியா, பாசில்

ஒரு காலத்தில் பெண்களின் கனவு தேவதையாக இருந்தவர் நதியா. பாசில் இயக்கத்தில் 'நோக்காத தூரத்து கண்ணும் நட்டு' படத்தில் அறிமுமானார். முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றவர். அதன்பிறகு பல படங்களில் மளமளவென நடித்தார். தமிழிலும் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் 'நோக்காத தூரத்து கண்ணும் நட்டு' படத்தின் இயக்குனரான பாசில், இந்த படத்தை நான் தமிழில் ரீமேக் செய்யப்போகிறேன். அதிலும் நீ தான் நடிக்க வேண்டும். அந்த படத்தின் மூலம்தான் தமிழுக்கு செல்ல வேண்டும் என்று நதியாவிடம் கூறிவிட்டார்.

பாசில் இளையராஜாவின் தீவிர ரசிகர், அவர் இசை அமைப்பில் படம் உருவாக வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அப்போது இளையராஜா படு பிசியாக இருந்தார். இன்னும் ஒரு வருடத்திற்கு என்னிடம் தேதிகள் இல்லை. ஒரு வருடம் கழித்து வாருங்கள் பார்க்கலாம் என்று கூறிவிட்டார். இதனால் பாசிலும், நதியாவும் இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்தார்க்ள.

ஒரு வருடத்திற்கு பிறகு மலையாள படத்தின் பாடல்களை கேட்ட இளையராஜா அதில் ஒரு பாடல் மிகவும் பிடித்துப்போக இந்த பாடலை பாடியது யார் என்று கேட்டார் . சித்ரா என்ற ஒரு புதுமுகம் பாடினார் என்றார்கள். குரல் நன்றாக இருக்கிறது அவரே தமிழிலும் பாடட்டும் என்றார். அந்த பாடல்தான் 'சின்னக்குயில் பாடும் பாடல் கேட்டு நான்...' அதன்பிறகு வெறும் சித்ரா 'சின்னக்குயில் சித்ரா' ஆனார். நதியா தமிழில் முன்னணி நடிகை ஆனார். 'பூவே பூச்சூடவா' என்ற பாடலின் முதல் வரியே படத்தின் தலைப்பாகவும் ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !