மேலும் செய்திகள்
பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா
5 minutes ago
'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம்
5 minutes ago
அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு
5 minutes ago
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறவர் மூன் தாஸ். பெங்காலி நடிகையான இவர் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். மாடலிங் துறையிலும் பணியாற்றி வருகிறார். 41 வயதான மூன் தாஸின் இயற்பெயர் அனுஷ்கா மோனி மோகன்தாஸ். இவர் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள காஷிமிராவில் நடிகைகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் சிலர் வாடிக்கையாளர்கள் போல் நடித்து மூன் தாஸை பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் 'ஹிந்தி, தெலுங்கு, தமிழில் நடித்து வரும் நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்வதை ஒப்புக் கொண்டார். சினிமாவில், தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் நடிகைகளை இங்குள்ள செல்வந்தர்களுக்கு பிடித்துப்போனால் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு கேட்பார்கள். நானும் சம்பந்தப்பட்ட நடிகைகளுடன் தொடர்பு கொண்டு பேசுவேன், ஒரு இரவுக்கு பல லட்சம் கிடைப்பதால் அவர்களும் மும்பை வந்து செல்வார்கள்' என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் மூன் தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
5 minutes ago
5 minutes ago
5 minutes ago