உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே நேரத்தில் ரஜினி விஜய் படங்களில் நடித்த இரட்டிப்பு சந்தோஷத்தில் மோனிஷா பிளஸ்சி

ஒரே நேரத்தில் ரஜினி விஜய் படங்களில் நடித்த இரட்டிப்பு சந்தோஷத்தில் மோனிஷா பிளஸ்சி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தில் சத்யராஜின் இளைய மகளாக நடித்தவர் நடிகை மோனிஷா பிளஸ்சி. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் முதன் முறையாக மாவீரன் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தான் இவருக்கு ஒரு பக்கம் கூலி, இன்னொரு பக்கம் விஜய்யின் ஜனநாயகன், என இரண்டு படங்களிலுமே நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறும்போது, “ரஜினிகாந்த் மற்றும் விஜய் இருவருடனும் நடிக்க வேண்டும் என்பது எல்லோருடைய கனவாக இருக்கும். எனக்கு ஒரே நேரத்தில் அந்த கனவு நலவானது. இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை. கூலி படத்தில் என்னுடைய முதல் நாள் காட்சியிலேயே ரஜினி சார் முன்பாக ஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து கதறி அழ வேண்டிய காட்சியில் நடித்தேன். அது ஒரு கனவு போலவே இருந்தது.

அதேபோல விஜய்யுடனும் நடிக்க வேண்டும், ஆனால் அது நிறைவேற போகிறதா என்ன.. அவர் வேறு தனது கடைசி படத்தை அறிவித்து விட்டாரே என்ற வருத்தத்தில் இருந்தபோது எதிர்பாராத விதமாக ஜனநாயகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஒரு சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும் விஜய் சாருடன் இணைந்து நடித்ததும் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்து விட்டது” என்று கூறியுள்ளார் மோனிஷா பிளஸ்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !