உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார்மேனி செல்வத்தின் கதை என்ன?

கார்மேனி செல்வத்தின் கதை என்ன?

பாத்வே புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரித்துள்ள படம் 'கார்மேனி செல்வம்'. ராம் சக்ரி இயக்கி உள்ளார். சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் , நடித்துள்ளனர். வருகிற அக்டோபர் 17ம் தேதியன்று தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது.

சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா சந்திரமவுலியும், கவுதம் மேனன் ஜோடியாக அபிநயாவும் நடித்துள்ளனர். யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசையை மியூசிக் கிளவுட் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் அமைத்துள்ளது.

படம் பற்றி இயக்குனர் ராம் சக்ரி கூறியிருப்பதாவது : சென்டிமென்ட், எமோஷன் கலந்த பேமிலி கதை. நிம்மதியும் அமைதியும் கொண்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி. அவருக்கு திடீரென பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. அப்போது அவருக்கு ஏற்படுகிற அனுபவங்கள், பிரச்னைகள்தான் படத்தின் திரைக்கதை.

இங்கு வாழ்வது என்பதை விடவும் பிழைப்பதற்காக ஓடும் ஓட்டம் பற்றி சொல்லும் படம். இரண்டு விதமான மக்கள் தான் இங்கே இருக்கிறார்கள். ஒன்று கடனாளியாக இருக்கிறார்கள், அல்லது நோயாளியாக இருக்கிறார்கள். அந்தக் கடனை அடைக்கும்போது அவன் நோயாளி ஆவதற்கான வாய்ப்புகளே அதிகம். இந்தச் சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிறவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை பற்றித்தான் படம் பேசுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !