உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கூலியில் நடித்தது மிஸ்டேக் என சொன்னாரா அமீர்கான்

கூலியில் நடித்தது மிஸ்டேக் என சொன்னாரா அமீர்கான்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து இருந்தார் ஹிந்தி நடிகர் அமீர்கான். அவர் இமேஜ், அவர் மார்க்கெட்டுக்கு இப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்கலாமா? அவரை வேஸ்ட் செய்துவிட்டார் இயக்குனர். அமீர்கான் சம்பந்தப்பட்ட சீன்கள் காமெடியாக இருந்தது. ஒரு பிரபல ஹிந்தி ஹீரோவை இப்படி தமிழில் காண்பிக்கலாமா என்று விமர்சனங்கள் எழுந்தன.

இப்போது கூலியில் நான் நடித்தது பெரிய மிஸ்டேக், என்னை தவறாக காண்பித்து விட்டார்கள். அந்த கேரக்டரில் நான் நடித்து இருக்ககூடாது என்ற அமீர்கான் பேட்டி கொடுத்ததாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது.

உண்மையில் அவர் அப்படி பேட்டி கொடுக்கவில்லை. அது பொய் செய்தி என கூலி தரப்பு மறுக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோவில் என்னை வேஸ்ட் செய்துவிட்டார் என்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார் ஹிந்தி நடிகர் சஞ்சய்தத். பின்னர் எனது வார்த்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என அவர் பல்டி அடித்தார். இப்போது அமீர்கான் விவகாரமும் பரவ, யாரோ லோகேசுக்கு எதிராக தீவிரமாக வேலை செய்கிறார்கள் என்கிறார்கள் அவர் தரப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !