உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / த மெட்ராஸ் மிஸ்டரி : அது சாந்தனு அல்ல, யோஹன் சாக்கோ

த மெட்ராஸ் மிஸ்டரி : அது சாந்தனு அல்ல, யோஹன் சாக்கோ


தமிழ்த் திரையுலகத்தில் அந்தக் காலத்தில் முதல் சூப்பர் ஸ்டார் எனப் பெயரெடுத்தவர் தியாகராஜ பாகவதர். அப்போது அவரைப் பற்றி தாறுமாறாக எழுதிய பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் என்பவரைக் கொன்ற குற்றத்திற்காக சிறை சென்று தண்டனை அனுபவித்து பின்னர் விடுதலையானார். அதன் பிறகு அவருடைய திரையுலக வாழ்க்கை அதல பாதாளத்திற்குச் சென்றது. அதன் பின் வறுமையில் சிக்கித் தவித்து இறந்து போனார்.

அந்த கொலை வழக்கை மையமாக வைத்து 'த மெட்ராஸ் மிஸ்டரி - பால் ஆப் எ சூப்பர் ஸ்டார்' என்ற வெப் தொடர் உருவாகியுள்ளது. இயக்குனர் ஏஎல் விஜய் தயாரிக்க, நஸ்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்தொடரில் நடிகர் சாந்தனு தான், தியாகராஜ பாகவதர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கடந்த வாரம் அதன் சிறு முன்னோட்டம் வந்ததும் சமூக வலைதளத்தில் பரபரப்பானது. ஆனால், சாந்தனு அக்கதாபாத்திரத்தில் தான் நடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

தியாகராஜ பாகவதர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மலையாள நடிகரான யோஹன் சாக்கோ. பல் மருத்துவம் படித்து டாக்டராகவும் இருப்பவர் நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டவர். பாலா இயக்கத்தில் இந்த வருடத் துவக்கத்தில் வெளிவந்த 'வணங்கான்' படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

சாந்தனுவும் அத்தொடரில் நடித்துள்ளார். ஆனால், அவரது கதாபாத்திரம் என்னவென்பது முழு டிரைலர் வெளியாகும் போது தெரிய வரும். நவம்பர் 6ம் தேதி இத்தொடர் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !