மேலும் செய்திகள்
பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது
2 days ago
‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன்
2 days ago
அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர்
2 days ago
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிக்க இளையராஜாவின் பயோபிக் படமான 'இளையராஜா' கடந்த வருடம் மார்ச் மாதம் சென்னையில் பிரம்மாண்ட துவக்க விழாவில் அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆனால், இதுவரை படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. இடையில் படம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. அதன்பின் எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழுவினர் கொடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் இளையராஜாவுக்கு தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இளையராஜாவின் பயோபிக்கை சீக்கிரம் எடுத்து முடிங்கள். நான் வேண்டுமானாலும் திரைக்கதை எழுதித் தருகிறேன் என்று பேசினார். இதற்கு முன்பு கமல்ஹாசன் கூட அப்படத்தின் திரைக்கதை எழுதும் பணியில் இருந்ததாகத் தகவல் வெளியானது.
ரஜினி பேசிய பிறகாவது இளையராஜா பயோபிக் குறித்த அடுத்த கட்ட செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களா?.
2 days ago
2 days ago
2 days ago