உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஜாதகத்தை விமர்சித்த படம்: 3 மொழிகளில் வெளியானது

பிளாஷ்பேக்: ஜாதகத்தை விமர்சித்த படம்: 3 மொழிகளில் வெளியானது


பழம்பெரும் கன்னட இயக்குனர் ஆர்.நாகேந்திர ராவ். கன்னடத்தில் முதல் பேசும் படத்தை இயக்கி, நடித்தவர். அவர் இயக்கி, தயாரித்த முக்கியமான படம்தான் 'ஜாதகம்'. இது ஒரே நேரத்தில் கன்னடத்தில் 'ஜாதகா பலா' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஜாதக பலம்' என்ற பெயரிலும் தயாரிக்கப்பட்டது. ஆர். கோவர்தனம் இசை அமைத்திருந்தார்.

ஆர். நாகேந்திர ராவுடன் டி.கே.பாலச்சந்திரன், ஆர். கோவர்தனம், கே. சாரங்கபாணி, நாகைய்யா, சூர்ய கலா, கே. என். கமலம், அங்கமுத்து, கே. ஆர். செல்லம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம் என்பார்கள். ஆனால், ஒரேயொரு பொய் எப்படி சிலரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்பதை ஜாதகப் பின்னணியில் இப்படம் சொன்னது.

கல்யாணமான மூன்று மாதத்தில் கல்யாணப் பெண் இறந்துவிடுவாள் என்று ஒரு ஜோதிடன் போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போக அதனால் அந்த பெண்ணும், அந்த குடும்பமும் எப்படிப்பட்ட பிரச்னைகளை சந்திக்கிறது என்பதுதான் படத்தின் கதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !