உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மற்ற மொழிகளில் 50 கோடி வசூலித்த 'லோகா'

மற்ற மொழிகளில் 50 கோடி வசூலித்த 'லோகா'


டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான மலையாளத் திரைப்படம் 250 கோடி வசூலைக் கடந்து ஓடி வருகிறது. மற்ற மொழிகளில் மட்டும் இப்படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் நடிகர் துல்கர் சல்மான், “19 நாட்களில் 50 கோடி ரூபாய் இந்திய மொத்த வசூல்! தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட பார்வையாளர்களின் இந்த அசாதாரண அன்புக்கு நன்றி. ஒவ்வொரு முறையும் நீங்கள் நல்ல திரைப்படங்களுக்கு ஆதரவாக நின்றிருக்கிறீர்கள், அதுதான் இந்த பயணத்தை மிகவும் சிறப்பாக்குகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

'லோகா' படத்தின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும் என்பதற்காக தான் நடித்த 'காந்தா' படத்தின் வெளியீட்டையும் தள்ளி வைத்துள்ளார் துல்கர். கடந்த வாரம் செப்டம்பர் 12ம் தேதி இப்படம் வெளியாக வேண்டியது. ஆனால், தள்ளி வைத்துள்ளார்கள். தீபாவளிக்கு வருமா அல்லது இன்னும் தள்ளிப் போகுமா என்பது இனிமேல் தான் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !