உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்

மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்

சிக்கந்தர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வெளியான படம் மதராஸி. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இந்த படம் கலவை விமர்சனங்களை சந்தித்தது. இதுவரை 80 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு ஆக்ஷன் கதையை இயக்கத் திட்டமிட்டுள்ள ஏ.ஆர்.முருகதாஸ் அந்த கதையை சமீபத்தில் சிவகார்த்திகேயன் இடத்தில் சொல்லி கால்ஷீட் கேட்டுள்ளார். ஆனால் அவரோ, பராசக்தி படத்திற்கு பிறகு தான் மூன்று இயக்குனர்களுக்கு கால்சீட் கொடுத்ததை சொல்லி அந்த படங்களுக்கு பிறகு தான் நடிக்க முடியும் என்று கூறிவிட்டாராம். இதனால் அதுவரைக்கும் சிவகார்த்திகேயனுக்காக காத்திருக்கலாமா? இல்லை வேறு ஹீரோக்களின் கால்சீட் கிடைத்தால் அவர்களை வைத்து இந்த புதிய படத்தை இயக்கலாமா? என்கிற ஆலோசனையில் இருந்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !