கிரிஷ் 4ம் பாகத்தில் இணையும் ராஷ்மிகா?
ADDED : 2 days ago
பாலிவுட் திரையுலகில் உச்ச நடிகர்களில் ஒருவர் ஹிருத்திக் ரோஷன். இவரது தந்தை ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் 2006ம் ஆண்டில் ஹிருத்திக் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கிரிஷ். இதைத்தொடர்ந்து கிரிஷ் 2, கிரிஷ் 3 ஆகிய பாகங்கள் ராகேஷ் ரோஷன், ஹிருத்திக் ரோசன் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்றது.
சமீபத்தில் கிரிஷ் 4ம் பாகத்தை ஹிருத்திக் ரோஷன் இயக்கி, கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது. இதனை ஆதித்யா சோப்ரா மற்றும் ராகேஷ் ரோஷன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே கிரிஷ் படங்களில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வந்தார். இப்போது மற்றொரு கதாநாயகியாக கிரிஷ் 4ம் பாகத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.