உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தங்கை என அழைத்து என் இதயத்தை நொறுக்கினார் : அஜித் மீதான கிரஷ் குறித்து நடிகை மகேஸ்வரி

தங்கை என அழைத்து என் இதயத்தை நொறுக்கினார் : அஜித் மீதான கிரஷ் குறித்து நடிகை மகேஸ்வரி

நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகளான மகேஸ்வரி, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கருத்தம்மா என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அஜித், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். குறிப்பாக அஜித்துடன் இணைந்து நேசம், உல்லாசம் ஆகிய படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் தான் மாறி மாறி நடைபெற்றன. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மகேஸ்வரி கூறும்போது அஜித் மீது தான் கொண்டிருந்த கிரஷ் குறித்தும் தன் இதயத்தை உடைக்கும் விதமாக அஜித் சொன்ன அந்த வார்த்தை குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “நேசம் மற்றும் உல்லாசம் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே சமயத்தில் நடைபெற்றதால் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் அஜித்துடன் இணைந்து பயணித்தேன். அப்போதே அவர் மீது எனக்கு மிகப்பெரிய கிரஷ் இருந்தது. இந்த படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து கிளம்பும் கடைசி நாளன்று என்னிடம் வந்த அஜித், மகி நீ என்னுடைய தங்கை போல உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேட்க தயங்காதே என்று கூறிவிட்டு சென்றார். அந்த வார்த்தையை அவரிடம் இருந்து கேட்டதும் என் இதயமே உடைந்து போனது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !