உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓஜி : கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி

ஓஜி : கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி


தமிழில் விஷால் நடித்த 'திமிரு' படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பேசப்பட்டவர் ஸ்ரேயா ரெட்டி. அதன் பிறகு 'வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம், சில சமயங்களில்' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தார். அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'அண்டாவ காணோம்' படம் முடிந்து சில வருடங்களாகியும் இன்னும் வெளிவராமல் உள்ளது.

தமிழைத் தவிர, தெலுங்கு, மலையாள மொழிகளிலும் நடித்துள்ள ஸ்ரேயா 2023ல் வெளிவந்த 'சலார்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அடுத்து இந்த வாரம் வெளியாக உள்ள பவன் கல்யாண் நடித்துள்ள தெலுங்குப் படமான 'ஓஜி' படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பைப் பற்றி பவன் கல்யாண், “தெய்வத் தாயின் உக்கிர வடிவம், அவர் ஒரு சக்தி வாய்ந்த, தீவிரமான நடிகை” எனப் பாராட்டிப் பேசியுள்ளார்.

தனது நாள் ஹனுமான் சாலிசா, பக்தி ஸ்தோத்திரத்துடன் தொடங்குவதை அறிந்து பவன் ஆச்சரியப்பட்டார் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரேயா.

“பவன் கல்யாண் மிகவும் ஆன்மிகமானவர், எனவே நான் ஹனுமான் சாலிசாவை எப்படி தொடங்கினேன் மற்றும் அதை என் வாழ்க்கை முறையில் எப்படி இணைத்துக் கொண்டேன் என்று கேட்டார். அவர் ஒரு ஆர்வமுள்ள வாசகர், எனவே நாங்கள் புராண மற்றும் ஊக்கமளிக்கும் புத்தகங்களைப் பற்றி விவாதித்தோம். உடற்பயிற்சியும் எங்கள் விவாதத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பவன் கல்யாண் சார் உடன் பணிபுரிந்தது சிறப்பானது. வாழ்க்கையின் பல அம்சங்களில் சிறந்த நுண்ணறிவுகளைப் பெற்றேன்,” என்று பவன் பற்றிப் பாராட்டியுள்ளார் ஸ்ரேயா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !