விஷாலின் 'மகுடம்' படப்பிடிப்புக்குச் சென்று வாழ்த்திய டி ராஜேந்தர்
ரவி அரசு இயக்கத்தில் விஷால், துஷாரா விஜயன், அஞ்சலி மற்றும் பலர் நடிக்கும் 'மகுடம்' படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து வருகிறது. தற்போது சென்னையில் உள்ள டிஆர் கார்டன் படப்பிடிப்புத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் நடந்து வரும் படப்பிடிப்புக்கு டி ராஜேந்தர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அது குறித்து விஷால், “எனது விருப்பமான நபரும் நடிகருமான, ஒரே ஒரு டி ராஜேந்தர் சார் அவர்களிடமிருந்து இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்கலாம் ? அவர் எனது அடுத்த படமான மகுடம் படத்திற்காக டிஆர் கார்டனில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டிற்கு வந்தார். இது தற்செயலாக 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பு நடந்த அதே இடம். அவரை சந்திக்கும் போது எப்போதும் நேர்மறை மற்றும் உத்வேகமாக உணர்கிறேன். இன்று முதல் ஆக்ஷன் தொடங்கட்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.