'காந்தாரா சாப்டர்-1' பட விழாவில் கண்ணீர் விட்ட ருக்மணி வசந்த்!
'ஏஸ், மதராஸி' போன்ற படங்களில் நாயகியாக நடித்த ருக்மணி வசந்த் தற்போது கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் 'காந்தாரா சாப்டர்-1' படத்தில் நடித்திருக்கிறார். காந்தாரா படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் தற்போது காந்தாரா சாப்டர்-1 படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் கர்நாடகாவில் நடைபெற்றது.
அப்போது மேடையில் பேசிய ருக்மணி வசந்த், ''இந்த படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்த ரிஷப் ஷெட்டிக்கு நன்றி. இந்த காந்தாரா சாப்டர்-1 படம் என்னை செல்லுலார் அளவில் மாற்றி இருக்கிறது. மேலும் கன்னடத்தில் நான் நடித்த 'சப்த சாகர தாட்சே' படத்தின் பிரிமியர் காட்சியின் போது என்னுடைய நடிப்பை ரிஷப் ஷெட்டி பாராட்டியது இன்னும் நினைவில் உள்ளது. அது ஒரு எமோஷனலான தருணமாகும்'' என்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மேடையிலேயே கண் கலங்கி இருக்கிறார் ருக்மணி வசந்த். இந்த காந்தாரா சாப்டர்-1 படம் வருகிற அக்டோபர் இரண்டாம் தேதி திரைக்கு வருகிறது.