உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவராஜ்குமாரை நேரில் சென்று சந்தித்த மஞ்சு மனோஜ்

சிவராஜ்குமாரை நேரில் சென்று சந்தித்த மஞ்சு மனோஜ்

தெலுங்கு திரை உலகின் சீனியர் நடிகர்களில் ஒருவரான மோகன்பாபுவின் மகன்கள் விஷ்ணு மஞ்சு மற்றும் மஞ்சு மனோஜ். கடந்த மாதம் விஷ்ணு மஞ்சு நடித்த கண்ணப்பா திரைப்படம் வெளியான நிலையில், கடந்தவாரம் மஞ்சு மனோஜ் வில்லனாக நடித்த மிராய் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தேஜா சஜ்ஜா கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் வெற்றியால் வில்லனாக நடித்துள்ள மஞ்சு மனோஜ் உற்சாகத்தில் இருக்கிறார். இந்த நிலையில் தனது மனைவி மவுனிகாவுடன் பெங்களூரு சென்றிருந்த மஞ்சு மனோஜ், பிரபல கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அவரிடம் வாழ்த்துக்களை பெற்றதுடன் அவர் உடல் நலம் குறித்தும் விசாரித்துள்ளார். சிவராஜ் குமாரும் மிராய் படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை மஞ்சு மனோஜிற்கு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !