தான் இறந்து விட்டதாக வதந்தி! பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்!!
சமீப காலமாக சோசியல் மீடியாவில் பிரபலங்கள் இறந்துவிட்டது போன்று பொய்யான செய்தி பரவி வருவது அதிகரித்து விட்டது. அந்த வகையில் நடிகர் பார்த்துக் கொண்டு இறந்து விட்டதாக யு டியூப்பில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதை பார்த்த பார்த்திபன் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'இதுபோன்ற செய்திகள் மரணம் அடைய வேண்டும். இதை தயாரிப்பவர்கள் தங்களின் வாய்க்கரிசிக்காக செய்தாலும் மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தி தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? சம்பந்தப்பட்டவர்கள் குடும்பம் அது தாயும் தாரமும் பெற்றதுகளோ யோசிக்க வேண்டும். இது பலமுறை என்னை மட்டுமல்ல பலரையும் இறைவனடி சேர, சார்ட்டஸ்ட் ரூட் டிக்கெட் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். அவர்களாகவே திருந்த அந்த சுடுகாட்டு சுடலை சாமியும் ஆறாவது அறிவோ உதவ வேண்டும்' என்று பதிவிட்டு இருக்கிறார் பார்த்திபன்.