உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காய்ச்சல் காரணமாக ஓஜி புரமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்த்த பவன் கல்யாண்

காய்ச்சல் காரணமாக ஓஜி புரமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்த்த பவன் கல்யாண்

நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் நாளை வெளியாக இருக்கும் படம் 'ஓஜி'. இந்த படத்தை இயக்குனர் சுஜித் இயக்கியுள்ளார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக மூன்று நாட்களை ஒதுக்கி இருந்தார் பவன் கல்யாண். அதன்படி சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவன் கல்யாண் அதன்பிறகு பெய்த கன மழையில் எதிர்பாராமல் நனைந்ததால் அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதை தொடர்ந்து மீதி இரண்டு நாட்கள் புரமோஷன் நிகழ்ச்சிகளையும் பவன் கல்யாண் குழுவினர் ரத்து செய்துள்ளனர். அது மட்டுமின்றி ஏற்கனவே அந்த முதல் நாள் நிகழ்ச்சியிலே ஓஜி படத்திற்கான மிக அதிகமான பப்ளிசிட்டி கிடைத்து விட்டதால், மீண்டும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என கூறி அவரை ஓய்வு எடுக்கும்படி மருத்துவர் குழுவும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !