உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரவி மோகனுக்கு அடுத்த நெருக்கடி : வீட்டு முன் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி அதிகாரிகள்

ரவி மோகனுக்கு அடுத்த நெருக்கடி : வீட்டு முன் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி அதிகாரிகள்

நடிகர் ரவி மோகன் வாங்கிய கடனை முறையாக செலுத்தாததால் அவரின் பங்களாவிற்கு ஜப்தி நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர் தனியார் வங்கி அதிகாரிகள்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரவி மோகன். சமீபகாலமாக இவரது வாழ்வில் புயல் வீச துவங்கி உள்ளது. மனைவி ஆர்த்தியை பிரிந்தார், விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடி உள்ளார். மற்றொருபுறம் ஒரு பட நிறுவனத்திற்கு இரு படங்கள் நடித்து தருவதாக சொல்லி ரூ.6 கோடி முன் பணம் பெற்றார். ஆனால் சொன்னபடி படம் நடிக்கவில்லை என கூறி அந்த நிறுவனம் கோர்ட்டில் இவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து ரவி மோகனும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். சொன்ன தேதியில் அந்த நிறுவனம் தான் படத்தை துவங்கவில்லை என கோரி நஷ்டஈடு கேட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது.

இதனிடையே சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ரவி மோகனுக்கு சொந்தமான ஈசிஆர் பங்களாவை ஜப்தி செய்து அதன் மூலம் தாங்கள் வழங்கிய முன்பணத்தைத் திரும்பப் பெற தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைத்தது. ஆனால் அந்த பங்களா கடனில் உள்ளதாம். கடந்த 10 மாதமாக இந்த பங்களாவிற்காக தனியார் வங்கியில் வாங்கிய கடனை ரவி மோகன் செலுத்தவில்லையாம். இதுதொடர்பாக அவரை வங்கி அதிகாரிகள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர் உரிய பதிலளிக்கவில்லை. இதனால் தற்போது அந்த வங்கி, தனது அதிகாரிகளை அனுப்பி கடனை செலுத்தாத அந்த வீட்டில் ஜப்தி நோட்டீஸை ஒட்டிச் சென்றனர். இந்த விவகாரம் ரவி மோகனுக்கு மேலும் நெருக்கடியை தந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

angbu ganesh, chennai
2025-09-25 10:01:22

பேசாம ஜெயம் ரவி-ன்னே பேர் இருந்திருக்கலாம் ராசி பார்த்து பேர் மாற்றினால் இப்படித்தான்