அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி
ADDED : 5 days ago
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜூ மேனன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் மதராஸி. அனிருத் இசையமைத்துள்ளார் . அமரனுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆக்ஷன் கதை களத்தில் உருவான இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. என்றாலும் 100 கோடி வசூலித்து இருப்பதாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் மதராஸி படம் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக ஒரு வீடியோ மூலம் படக்குழு இன்று அறிவித்திருக்கிறது.