முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி
ADDED : 46 days ago
பவன் கல்யாண், பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ஓஜி. தமன் இசையமைத்துள்ள இந்த படம் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. நேற்று இப்படம் உலகம் முழுக்க வெளியானது. இந்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் குறித்த ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், இந்த ஓஜி படம் நேற்று முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 90 கோடி வசூலித்திருப்பதாகவும், உலக அளவில் 154 கோடி வசூலித்து இருக்கிறது. இதுவரை பவன் கல்யாண் நடித்து வெளியான படங்களை எல்லாம் விட இந்த படம்தான் முதல் நாளில் அதிகப்படியாக வசூலித்து உள்ளதாம்.