உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆஸ்கருக்கு செல்லும் சூர்யா மகளின் ஆவணப்படம்

ஆஸ்கருக்கு செல்லும் சூர்யா மகளின் ஆவணப்படம்

நடிகர், நடிகைகளின் வாரிசுகளும் சினிமாவில் களம் இறங்குவது அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் அடுத்து வருகிறார் சூர்யா, ஜோதிகா தம்பதியரின் மகள் தியா. இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.

தற்போது தியா இயக்குனராக களம் இறங்கி உள்ளார். திரையுலகில் பணியாற்றும் லைட்வுமன்கள் பற்றிய டாக்குமெண்டரி படம் ஒன்றை 'லீடிங் லைட்' என்ற பெயரில் இயக்கி உள்ளார். இதனை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

பாராட்டுகளை குவித்து வரும் இப்படம், ஆஸ்கர் குவாலிபையிங் ரன்னுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் ரீஜென்சி தியேட்டரில் திரையிடப்படுகிறது. வரும் 26ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை தினமும் மதியம் 12 மணி காட்சியாக இப்படம் திரையிடப்படுகிறது. அறிமுக இயக்கத்திலேயே ஆஸ்கர் வரை சென்றிருக்கிறார் சூர்யாவின் மகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !