உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதி படத் தலைப்பு அறிவிப்பு தள்ளிவைப்பு

விஜய் சேதுபதி படத் தலைப்பு அறிவிப்பு தள்ளிவைப்பு


தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் தமிழ்ப் படம் ஒன்றின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. இப்படத்தில் தபு, சம்யுக்தா, துனியா விஜய் மற்றும் பலர் நடிக்கிறார்கள். மஹதி ஸ்வர சாகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு பற்றிய நிகழ்ச்சி இன்று சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கரூரில் விஜய் கூட்டத்தில் நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர்.

இன்று இயக்குனர் பூரி ஜெகன்னாத்தின் பிறந்தநாள். அதனால், படத்தலைப்பை இன்று அறிவிக்க இருந்தார்கள். அடுத்து வேறொரு நாளில் நிகழ்ச்சி நடத்தி அறிவிப்பை வெளியிடுவார்களா அல்லது சமூக வலைதளங்களில் வெளியிடுவார்களா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

படத்திற்கு 'ஸ்லம்டாக்' எனப் பெயர் வைத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !