மேலும் செய்திகள்
கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்'
1 days ago
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
1 days ago
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சமீப வருடங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரிஷ்யம் படத்தின் அடுத்தடுத்த இரண்டு பாகங்களைத் தொடர்ந்து, தற்போது மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் மோகன்லாலின் மனைவியாக நடித்த மீனா, மகள்களாக நடித்த அன்ஷிபா ஹாசன் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் இந்த படத்திலும் தொடர்ந்து இடம் பிடித்துள்ளனர்.
தற்போது கேரளாவில் தொடுபுழாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்திற்கு அருகில் உள்ள ஜிம் ஒன்றிற்கு மோகன்லால் ரெகுலராக பயிற்சிக்கு சென்று வருகிறார். அவருடைய ஜிம் பார்ட்னராக இந்த படத்தில் அவரது மகளாக நடிக்கும் அன்சிபா ஹாசனும் அதே ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து வருகிறார். ஜிம்மில் மோகன்லாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அன்ஷிபா ஹாசன்.
சமீபத்தில் நடைபெற்ற மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் இணை செயலாளர் பதவிக்கு அன்ஷிபா ஹாசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மலையாளத் திரையுலகில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட திரிஷ்யம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் இவர் இடம் பெற்று நடிப்பதால் தொடர்ந்து டைம்லைட்டில் இடம் பிடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1 days ago
1 days ago