உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி

இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் 'பராசக்தி'. 1965 காலகட்டத்தில் ஹிந்தி திணிப்பு போராட்டம் குறித்து இப்படம் உருவாகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக சிதம்பரம், மதுரை, இலங்கை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பூந்தமல்லி நகரில் அரங்கம் அமைத்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் வருகிற தீபாவளி தினத்திற்குள் நிறைவு செய்ய சுதா கொங்கரா திட்டமிட்டு அதற்கான பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !