சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
ADDED : 18 hours ago
நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் தமன் இவர்கள் கூட்டணியில் ஓஸ்தி, வாலு, ஈஸ்வரன் போன்ற படங்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தெலுங்கில் தமன் இசையமைத்த ஓ.ஜி படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடினார். ஆனால், ஓ.ஜி படத்தில் சிம்பு பாடியிருந்த அந்த பாடலை வேறு ஒருவர் குரலில் மாற்றி உள்ளனர். இதன் காரணமாக சிம்பு நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படத்திற்கு தமன் இசையமைக்க கேட்டுள்ளார். ஆனால் சிம்புவோ தமன் வேண்டாம், அனிருத்தை இசையமைக்க வைக்கலாம் என்கிறாராம். இதனால் சிம்பு மீது தமன் அதிருப்தியில் உள்ளார் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.