உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன்

படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன்


தமிழ், மலையாளத்தில் நடித்து வந்த நடிகை அனுபவ பரமேஸ்வரன் சமீப நாட்களாக தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். ஜூலையில் மலையாளத்தில் ‛ஜேஎஸ்கே', ஆகஸ்டில் தெலுங்கில் ‛பர்தா', செப்டம்பரில் ‛கிஷ்கிந்தாபுரி' என தொடர்ந்து மாதத்திற்கு ஒரு படம் என்கிற கணக்கில் அவரது படங்கள் வெளியாகி வருகின்றன. இம்மாதம் அக்டோபர் 17ல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்த 'பைசன்' படம் ரிலீசாகிறது.

இதற்கிடையே அவ்வப்போது தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டும் வருகிறார். சமீபத்தில் சிறு வயதில் பேய் படங்களை வீட்டில் யாருக்கும் தெரியாமல் பார்த்தேன் என்றெல்லாம் கூறியிருந்தார். தற்போது தன் பள்ளிகால நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், ''சிறு வயதில் இருந்தே நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நான் படித்த பள்ளியில், முதலிடம் பிடிக்கிறவங்களுக்குத்தான் பள்ளி நாடகங்களில் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்கும். நன்றாக படிப்பவர்களால் தான் பெரிய வசனங்களை மனப்பாடம் செய்து பேச முடியும் என்பதால் அவர்களுக்கே வாய்ப்பளித்தனர்.

அது என் மனதில் ஆழமாக பதிந்தது. நான் பள்ளியில் டாபர் கிடையாது என்பதால் என்னால் நடிக்க முடியாதோ என்ற பயம் இருந்தது. நடிகையாக வேண்டும் என்ற என் கனவையும் இதனால் ஒதுக்கி வைத்தேன். வளர்ந்த பிறகே படிப்புக்கும், நடிப்புக்கும் சம்பந்தமே இல்லை என்பது தெரியவந்தது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !