உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்'

கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்'

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‛நாயகன்'. மும்பையில் வாழ்ந்த தமிழகத்தை சேர்ந்த வரதராஜன் முதலியார் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகி இருந்தது. மும்பையில் தமிழ் டானாக வேலு நாயக்கராக கமல் நடித்திருந்தார். அவருடன் சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்தனர். இளையராஜா இசையமைத்தார். ‛தென்பாண்டி சீமையில, நீ ஒரு காதல் சங்கீதம்' உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.

கமலுக்கு சிறந்த நடிகர், பிசி ஸ்ரீராமுக்கு சிறந்த ஒளிப்பதிவு, தோட்டா தரணிக்கு சிறந்த கலை என இந்த படத்திற்கு மொத்தம் 3 தேசிய விருதுகள் கிடைத்தன. தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக கொண்டாடப்படும் இதை 38 ஆண்டுகளுக்கு பிறகு மறு வெளியீடு செய்கின்றனர். இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றபடி டிஜிட்டலில் படத்தை மெருகேற்றி வருகிற நவ., 7ம் தேதி கமல் பிறந்தநாளை முன்னிட்டு அதற்கு முதல்நாள் நவ., 6ல் தமிழகம் முழுக்க ரீ-ரிலீஸ் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !