உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி

கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி

மம்முட்டி நடிப்பில் 'பசூகா' படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. தற்போது நடித்து முடித்துள்ள 'களம் காவல்' படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதையடுத்து மோகன்லாலுடன் 'பேட்ரியாட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 74 வயதான மம்முட்டி, கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். மம்முட்டிக்கு குடல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் அவர் நடித்து வந்த படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் தவிர்த்து, நீண்டகாலமாக ஓய்வில் இருந்தார்.

தற்போது அவர் நோயிலிருந்து மீண்டு விட்டதாக தகவல்கள் வெளியானது. சென்னையில் சிசிச்சை பெற்று வந்த அவர் கேரளாவில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் நடிக்க இருக்கிறார். இதனை மம்முட்டியே அவரது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ''சிறிய இடைவெளிக்குப் பிறகு, நான் வாழ்க்கையில் மிகவும் விரும்பும் விஷயத்திற்கு (நடிப்பதற்கு) திரும்பி வருகிறேன். என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. சொல்ல வார்த்தைகள் போதவில்லை. கேமரா என்னை அழைக்கிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.

இதனால் மம்முட்டி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !