உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இணையதள தேடல் : தீபிகா படுகோன்

இணையதள தேடல் : தீபிகா படுகோன்

இந்திய நடிகர், நடிகைளை இணையதளத்தில் எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள், தேடுகிறார்கள் என்பதை பொருத்தே அவர்களது விளம்பர மார்க்கெட்டிங் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் யார் யாரை அதிகமாக தேடியிருக்கிறார்கள் என்ற புள்ளி விபரங்கள் வெளியிடப்படும். தற்போது கடந்த 10 ஆண்டுகளில் யார் அதிகம் தேடப்பட்டிருக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.

இதில் தீபிகா படுகோன் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், இர்பான்கான், அமீர்கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய்குமார் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கிறர்கள்.

சமந்தாவிற்கு 13வது இடமும், தமன்னாவுக்கு 16வது இடமும், நயன்தாராவிற்கு 18வது இடமும், பிரபாசுக்கு 29வது இடமும், தனுஷிற்கு 30வது இடமும் கிடைத்துள்ளது. விஜய், அஜித், கமல், ரஜினி உள்ளிட்ட மற்ற பிரபலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !