உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்

போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் 'அதர்ஸ்'. மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

முனீஷ்காந்த், 'நண்டு' ஜகன், ஹரிஷ் பெராடி, வினோத் சாகர், இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 7ம் தேதியன்று வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மலையாள நடிகையான அஞ்சு குரியன், தமிழில் சென்னை டூ சிங்கப்பூர், ஜுலை காற்றில், சில நேரங்களில் சில மனிதர்கள், ஓஹோ எந்தன் பேபி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முதன் முறையாக இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !