வாசகர்கள் கருத்துகள் (1)
நிச்சயதார்த்தம் ரஹஸ்யம் ஓகே நடிகர் நடிகையர் திருமணம் அவசியமா?
நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா இடையே திடீரென ரகசியமாய் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. அதேப்போல் தென்னிந்திய மட்டுமல்லாது ஹிந்தியிலும் பிரபலமாகி உள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா. இருவரும் ‛கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் நடித்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலானது. தொடர்ந்து காதலர்களாக வெளியூர்களில் சுற்றி வருகின்றனர். அதேசமயம் இருவரும் காதலிப்பதை இன்னும் வெளிப்படையாய் அறிவிக்கவில்லை, காதலை மறுக்கவும் இல்லை.
இந்நிலையில் இவர்கள் இருவரும் திடீரென நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா இல்லத்தில் இந்த நிச்சயதார்த்தம் ரகசியமாக இருவீட்டாரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்க நடந்துள்ளதாம். அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் இவர்களின் திருமணம் நடக்கலாம் என்கிறார்கள்.
நிச்சயதார்த்தம் ரஹஸ்யம் ஓகே நடிகர் நடிகையர் திருமணம் அவசியமா?